සාමාන්‍ය

மனித சிந்தனை

Written by Colombo Beacon

சிந்தனை பாரம்பரியம் உருவானதன் பின்ணனி மனிதனின் அவதானமும் அவனின் சூழற் காரணிகளுமேயாகும்.சூழற் காரணிகளை தனக்கேற்ப மாற்றியமைக்க மனிதன் அவனின் இயல்பினால் தூண்டப்படுகிறான். அக் காரணிகளின் ஆக்க பூர்வமான மாற்றங்களும் அவனுக்கு அழிவினைத் தேடித் தரவல்லது. இயற்கையினது இயல்பினை புரியாத மனித இயல்பே இவ்வாறான ஆக்க பூர்வமான அழிவினைத் தேடித் தருகின்றது. சடத்துவ இயல்புகளின் புரிதல் இன்றிய மனிதனும் புரிதல் உள்ள மனிதனும் மனித இயல்புகளின்,மனித இயல்பு மாற்றங்களின் புரிதல் இன்றியே வாழ்கிறான்,வாழ முனைகிறான்.

புரிதல் பற்றிய உணர்வு அவன் இயல்பினாலும் அவனின் சூழலினாலும் அவனின் சூழல் பற்றிய அவதானத்திலும் நிர்மாணிக்கப்படுகிறது. இவ்வுணர்வானது புரிந்துணர்வை,விட்டுக் கொடுப்பை ஏற்படுத்தி அம் மனிதனின் இயல்பிலும் அவனின் சமூக இருப்பிலும் பாரியதொரு முன்னேற்றத்தினையும் ,சிறந்த மாற்றத்தினையும் உருவாக்கும்.

மனிதன் உருவாகியதன் (உருவாக்கப்பட்டதன்) நோக்கம் பற்றிய ஒரு உணர்வு,தேடல் அவனில் இச் சூழல் காரணிகள் ஏற்படுத்தும்.இத்தேடலோ உணர்வோ இன்றியவன் இச் சூழலின் உண்மைத் தன்மையிலிருந்து நீக்கியவனாவான்.அவனின் ஆரம்பம் ,அவனின் உருவாக்கம் தொடர்பான தேடலும் அவனின் இறுதி பற்றிய உணர்வும் அவனில் எழும் எனில் அவனின் இயல்பினை பூரணமாக புரிந்து கொள்வான்.அவனின் இயல்புகளை கூட புரிந்து கொள்ள முடியாதவன் அவனின் பிரதிபலிப்புக்களின் இயல்புகளை பற்றி புரிந்து கொள்வதிலிருந்து தூரமாக்கப்படுகிறான்.இயல்புகளை புரிந்து கொள்ளல் என்பது தன்னிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியது.

குளிரான சூழலில் வாழும் கடின ஆடைகளை பயன்படுத்தும் மனிதன்.வெப்ப வலயங்களில் பயன்படுத்தப்படும் மிருதுவான ஆடைகள் குறித்தும் வெப்ப வலய மனித இயல்புகள் குறித்தும் விமர்சிப்பது எவ்வாறு நியாயமாகும்?  குளிரான சூழலில் வாழும் கடின ஆடைகளை பயன்படுத்தும் மனிதன் அவனின் ஆடைத் தெரிவு குறித்து புரிதல் இன்றி இருப்பின் அவன் வெப்ப வலய மனிதனின் இயல்பினை விமர்சிப்பான். மனிதனின் தெரிவின்

மீது புரிதல் அவனில் ஏற்படும் வரையில் அவனது தெரிவுகள் கண் மூடித்தனமானவையாகவே இருக்கும்.அவனின் பிரதிபலிப்புக்கள் மீது புரிதல்  ஒரு போதும் ஏற்பட முடியாது.

மனித இயல்பின் மீது இயற்கையாக தோன்ற வேண்டிய பல உணர்வுகள் இருக்கவே செய்கின்றது.அம் மனித இயல்பின் விருப்பு ,தேவை என்பன அவனில் ஏற்படும் விதம் குறித்து அவனது உணர்வுகள் வினவ வேண்டும்.அது பற்றிய சிந்தனை அவனிடத்தில் தோன்ற வேண்டும்.அவ்வாறில்லாத மனிதன் எவ்வாறு அவனின் பிரதிபலிப்புக்கள் பற்றி , பிரதிபலிப்பின் இயல்பு பற்றி புரிதலினை ஏற்படுத்திக் கொள்வான்? அவனுள் அவனின் இயல்பு பற்றிய சிந்தனை வராதவிடத்து நாம் எவ்வாறு அவனின் மூலம் சிறந்த மாற்றத்தினையோ ,முன்னேற்றத்தினையோ ஏதிர்பார்கலாம்!?

ஒவ்வொரு மனிதனினதும் இயல்புகளுக்கும் பெறுமதி இருப்பதை ஒவ்வொரு மனித இயல்பும் ஏற்றுக் கொள்ளுதல் மனித இருப்பிற்க்கு மிக முக்கியமாகும்.மனித இயல்புகளின் பெறுமதிகள் அவ்வப் பெறுமதிகளாக பேணப்படுதல் அவசியமாகும். ஒவ்வொரு மனிதனும் அவனின் இயல்பினை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.அத்தோடு  அவனின் பிரதிபலிப்புக்களின் இயல்பு மீதும் புரிதலினை ஏற்படுத்திக் கொள்வது மனித ஓற்றுமையின் காரணியாகும்.  இதுவே நாம் எமக்கு கட்டிக் கொண்டுள்ள மதிலாகும் மனித சுவனத்திற்க்கு நுழையும் பாதையில்.
மனிதனை மனிதனாக மதிக்கும்
மனிதத்தினை விட மனித நேயம்
மனிதர்களில் எங்கு உண்டு??.

  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

About the author

Colombo Beacon

Leave a Comment